பரபரப்பாகும் தமிழக அரசியல்! கைகோர்க்கிறதா தி.மு.க - அ.தி.மு.க: ஸ்டாலின் அதிரடி முடிவு
த.வெ.கவிற்கு பெரும்பான்மை கிடைத்து புதிய ஆட்சி அமையுமா என்ற பரபரப்பிற்கு மத்தியில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக பரவி வரும் செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த விடயத்தை மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் த.வெ.க 108 தொகுதிகளில் வெற்றி பெற்று 1967க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்
ஆதரவு கோரல்
தவெக 108, திமுக கூட்டணி 73 மற்றும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வென்று தொங்கு சட்டசபை நீடித்த நிலையில், தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிமைக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடமிருந்து ஆதரவை கோரியது.
இதில் 5 தொகுதிகளை வைத்திருக்கும் காங்கிரஸ் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வி.சி.க மற்றும் இடதுசாரிகள் தங்களுடைய ஆதரவை இன்னும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறான சூழலில் தான், திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
நேற்று வெளியான செய்தியானது, அதிமுகவிற்கு திமுக ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளதாகவும், அதிமுகவும் அதற்கு இணங்கியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினின் கருத்து
இந்த சூழலில் தான் அதை மறுக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா உடன் முக ஸ்டாலின் பேசிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில், தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது வழிவிடும் என்றும், முதல் 6 மாதத்திற்கு புதிய ஆட்சியை எந்த தொந்தரவும் திமுக செய்யாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் த.வெ.க தலைவர் திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டும் என்றும் எனவும், மாதம் மகளிருக்கு 2500 கொடுப்பது கடினமான காரியம் என்பதால் திமுக அரசு வழங்கிய 1000 ரூபாயை தொடர்ந்து வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO