தலங்கம பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
திறைசேரி செயலாளரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகீஸ்வர பண்டார மீது சாணம் மற்றும் முட்டைகளில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தலங்கம பொலிஸாருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளதாக புதிய ஜனதா முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவை
நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் பெலவத்தை இல்லத்திற்கு முன்னால் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது தன்னைத் தாக்கிய நபர்களுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் மூலம் இலங்கை பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை மீறி ஒரு குழுவினர் தன்னைத் தாக்கியுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிஸார் இதுவரை விசாரணைகளை ஆரம்பிக்காமை அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam