இலங்கையில் ஆகஸ்ட் - செப்டெம்பரில் கோவிட் சடலங்கள் குவிந்து கிடக்கும் என எச்சரிக்கை
நாடு தற்போதுள்ள நிலையில் மூடவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் மரணங்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் நாடு முழுவதும் கோவிட் மரணங்கள் குவியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 வாரங்களாவது கடுமையான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
தொற்று நோயை சாதகமாக பயன்படுத்தி சில தொழிற்சங்கங்கள் தங்கள் பதவி காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அது தவறான செயல் என அவர் கூறியுள்ளார்.
நாரஹென்பிட்டி அபயராமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
