திருகோணமலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு
திருகோணமலை- சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவற்கேணிக்காடு கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் பயிர்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன.
இந்த சம்பவமானது இன்று(22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களும் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
கிராம மக்கள் கோரிக்கை
நான்கு வருடங்களாக பராமரித்து வரப்பட்ட காய்க்கும் பருவத்திலுள்ள தென்னை மரங்களே இவ்வாறு காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வீட்டுப் பாதுகாப்பு வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும்,பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் சேருநுவர -நாவற்கேணிக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
