மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் தொடர்பில் நாமல் - ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரசாயனங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கி பழகிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
மேலும் உரையாற்றிய அவர், கெஹெல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், மித்தெனிய - எம்பிலிப்பிட்டிய வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இரண்டு கொள்கலன்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பெக்கோ சமனின் அறிவுறுத்தலில் மித்தெனிய பகுதியை சேர்ந்த உள்ளுராட்சி உறுப்பினர் மற்றும் அவரின் சகோதரர் ஒருவரும் குறித்த கொல்கலனை அவர்களின் சகோதரியின் வீட்டில் மறைத்து வைத்துள்ளனர்.
குறித்த காணி அவர்களுக்கு சொந்தமான பேருந்துகழுவும் இடமாக பாவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாங்கள் முறையான விசாரணைகளை செய்து கொண்டிருக்கிறோம்.இச்சந்தர்ப்பத்தில் பல அரசியல்வாதிகள் வெளிநாடு சென்றுள்ளனர்.
நாம் முதலில் குறிப்பிட்ட இரு அரசியல்வாதிகள் தான் ஐஸ் போதைப்பொருட்களை நாட்டில் விநியோகிக்கும் வலையமைப்பை நடத்தியுள்ளனர்.
தகுதி தராதரம் பாராமல் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.
மேலும், நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இருவர்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களுடன் நெருக்கி பழகிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் காண்பித்தமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



