திருகோணமலையில் காட்டு யானையால் பாதிக்கப்படும் பயிர்செய்கைகள்
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈச்ச நகரில் காட்டு யானை ஒன்று தங்களது பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவமானது, இன்று (22.06.2024) அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வாழை, தென்னை மற்றும் மரவள்ளி உள்ளிட்ட பல மரங்களை யானை அழித்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கை
மேலும், இந்த காட்டு யானை தொடர்ந்தும் தங்களது ஊருக்குள் இரவு வேளைகளில் வருவதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதம் விளைவித்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சுமார் 15இற்கும் மேற்பட்ட தென்னை மற்றும் வாழை மரங்களை முற்றாக நாசமாக்கியதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இந்த சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் இந்த காட்டு யானையிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |