இலங்கையில் பல்வேறு காரணங்களினால் உயிரிழக்கும் காட்டு யானைகள்: வெளியான விபரம்
2023 அக்டோபர் மாதம் வரை இலங்கையில் மொத்தம் 399 யானைகள் இறந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை யானை-மனித மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இயற்கை காரணங்களினாலும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் விளம்பர அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாசு பாவனையால் 39 யானைகளும், விசவாயு தாக்கி 3 யானைகளும், தொடருந்து விபத்தில் 19 யானைகளும், வீதி விபத்தில் ஒரு யானையும், விவசாய கிணற்றில் விழுந்து நான்கு யானைகளும் உயிரிழந்துள்ளன.
மரணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்
இதுமட்டுமன்றி மேலும் பல்வேறு சம்பவங்கள் காரணமாக 15 யானைகள் இறந்துள்ளன. மீதமுள்ள இறப்புகள் முதுமை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களால் நிகழ்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிலேயே யானைகளின் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ள ஆண்டாகும், அந்த ஆண்டில் 439 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, 2022 உடன் ஒப்பிடும் போது, இலங்கை
வரலாற்றில் இந்த ஆண்டில் யானை மரணங்கள் அதிகளவில் பதிவாகும் வாய்ப்புக்கள்
அதிகம் என ஹாசினி சரத்சந்திர கூறியுள்ளார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
