கல்முனையில் காட்டு யானைகளால் தொடரும் உயிரிழப்புகள்
கல்முனை (Kalmunai) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு பின்புறமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (7) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பெரிய நீலாவனை பிரதேசத்தை சேர்ந்த செல்லையா வேலாயுதம் வயது (68) என்பவரே உயிரிழந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது சம்பவம்
அத்துடன் குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.
மேலும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீலின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் பூரண விசாரணையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் காட்டு யானை தாக்கி பலியான மூன்றாவது சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
