சம்மாந்துறையில் காட்டு யானை அச்சுறுத்தல்! விசனம் தெரிவித்த மக்கள்
தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை சலாம் பள்ளிவாசல் வீதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் நேற்று(17.03.2026) இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள் வளவு வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி சில வீடுகளின் சுவர்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அச்சத்தில் பொதுமக்கள்
மேலும், அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன், அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.




ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam