பயிர்களைத் துவசம் செய்த காட்டுயானை (Photos)
மட்டக்களப்பு - மண்முனை பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தினுள் நுழைந்த காட்டுயானை அங்கிருந்த பயிர்களை அழித்துத் துவசம் செய்துள்ளது.
நேற்றைய தினம் (21.02.2023) அதிகாலை மண்முனை - மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் உள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தன்று சமுர்த்தி வங்கியின் வேலியை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த காட்டுயானை, அங்கிருந்த மரவள்ளி, வற்றாளை, பயற்றை போன்ற பயிர்களை அழித்துச் சேதப்படுத்தியுள்ளதாகக் கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
வங்கி காவலாளி மற்றும் வங்கி ஊழியர்களால் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டமே
இவ்வாறு காட்டுயானையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.




