மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கபட்ட சம்பவம் காட்டு யானை
மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாப்பாக காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரத கடவையைக்கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட்ட சம்பவம் நேற்று(13) மாலை இடம் பெற்றுள்ளது.
கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ் ) அமைப்பின் உதவியுடன் மாவட்ட பண ஜுவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் இந்த காட்டு யானையை கரையைக்கடந்து நீர் வழியாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக வாழைச்சைனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கும் கிராமங்களுக்குள் நுழைந்து பொதூமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த யானையை இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.