கிளிநொச்சியில் காட்டு யானையின் அட்டகாசம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு (Photos)
கிளிநொச்சி கண்டாவள கல்மடுநகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் பாதிப்புக்குள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது ஒரு வார காலமாக தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு பகுதியில் மாலை 6:00 மணி தொடக்கம் அதிகாலை வரை காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்கு அச்சநிலை தோற்றியுள்ளதற்கும் நாளாந்த கடமைகளை முன்னெடுக்க முடியாது ஆறு மணிக்கு பின்னர் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
காணி உரிமையாளர்களுக்கு இடர்பாடு
வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த 45 க்கு மேற்பட்ட தென்னைகளை முற்று முழுதாக அளித்துள்ளதாகவும் தொடர்ந்து இப்பகுதியில் இது மூன்றாவது தடவையாகவும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காணி உரிமையாளர் தாம் பெறும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் அறிய தந்திருந்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென இப்பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
