கிரான்குளத்தில் காட்டு யானைகளை துரத்தும் பணி இரவிலும் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் நிரப்பரப்பிற்குள் கடந்த இரண்டு மாதகாலமாக மட்டக்களப்பு வாவியோரமுள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (04.11.2025) இரவு மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் சஞ்சரித்துள்ளது.
யானை துரத்தும் பணி
இதன்போது சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் மண்முனை பற்று பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து காட்டு யானைகளை துரத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டு யானைகளை துரத்தும் பணியில், மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து





