இயங்காது நின்ற லொறிக்கு உதவிய யானை - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி
ஹபரன பிரதான வீதியில் சிறிய லொறியொன்றின் இயந்திரம் சடுதியாக இயங்காது நின்ற நிலையில் அவ்வழியாக வீதிக்குச் சென்ற காட்டு யானை குறித்த லொறியினை இரண்டு தடவைகள் தள்ளி இயங்கச் செய்யும் அபூர்வ சம்பவக் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
கந்தளாய் பகுதியிலிருந்து தம்புள்ளைக்கு பொருட்கள் ஏற்றுவதற்காகச் சென்ற சிறிய லொறியொன்றே இவ்வாறு ஹபரன வீதியின் இடையில் நின்று விட்டது.
உதவிக்கு யாருமில்லாத நிலையில் காட்டு யானையொன்று வீதிக்குச் சென்ற போதே அவ் யானை லொறியினை தள்ளி இயங்கச் செய்வதற்கு உதவியமையினால் வாகனம் அவ்விடத்திலிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது.
இக்காட்சியினை பின்னால் வாகனமொன்றிலிருந்த இளைஞர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியினை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
அக்காட்சி தற்போது வைரலாக பரவி வருகின்றது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
