முல்லைத்தீவில் காட்டு யானை உயிரிழப்பு! வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு ஆய்வு
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களிக்காடு எனப்படும் அரச காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த யானை உயிரிழந்து சுமார் 15 நாட்களுக்கு மேல் இருந்த நிலையில் காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்தே யானை அடையாளம் காணப்பட்டுள்ளது.
யானையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த அடையாளம், யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட தடயங்கள் காணப்பட்டதை தொடர்ந்து யானை உயிரிழப்பு குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து முள்ளியவளை பொலிஸாரும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam