சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு (VIDEO)
வவுனியா - கணேசபுரம் பகுதியில் அனுமதியற்ற மின்கம்பியில் சிக்கி காட்டு யானையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோட்டமொன்றினை சுற்றி அனுமதியற்ற முறையில் போடப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி சுமார் எட்டு அடி உயரமுள்ள 25 வயதுடைய யானை ஒன்று மின்கம்பியில் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முன்னெடுப்பு
உயிரிழந்த காட்டு யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (17) பிற்பகல் வடமாகாண கால்நடை வைத்தியர் பா.கிரிதரனால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
அனுமதியின்றி மின்சாரத்தை இணைத்த தோட்டத்தின் உரிமையாளரான 50 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri