லண்டன் சிறைச்சாலையில் திருமண பந்தத்தில் இணைந்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க இரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (50 வயது) 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கியிருந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மோரிஸ், என்பவரை 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துக்கொண்டுள்ளதுடன்,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
