விஜயதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு (Wijeyadasa Rajapakshe) எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்புரிமையை பெற்றிருக்கும் தருணத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் கட்சி உறுப்புரிமை பெற்றுக் கொண்ட நிலையில் வேறும் கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்
ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் விஜயதாச ராஜபக்ச ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றிருந்தால் அவரினால் தொடர்ந்தும் பொதுஜன முன்னணியின் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்ச ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்புரிமையை இழந்தால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் சவாலுக்கு உட்படுத்தப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri