ராஜபக்சர்களின் மூளை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது: விஜயபால ஹெட்டியாராட்சி
விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும் சோளனைக் கூட உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றால் ஆட்சியாளர்களின் மூளை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராட்சி(Wijepala hettiarachchi) சாடியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ராஜபக்ஷ அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்த 69 லட்சம் மக்கள் உட்பட ஏனையவர்கள் இன்று மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றப்பட்டதினால் சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. நாட்டில் சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திடம் டொலர் கையிருப்பு இல்லை.
விவசாயம் உற்பத்திகள் வீழ்ச்சியடையும் போது வெளிநாடுகளிலிருந்து அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லாமல் போகின்ற போது நாட்டு மக்கள் பாரிய பாதிப்பனை எதிர்நோக்குவார்கள் என்ற பயம் எமக்கு உள்ளது.
விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும் சோளனைக் கூட உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றால் ஆட்சியாளர்களின் மூளை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan