அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார்: விக்னேஸ்வரன் திட்டவட்டம்
எமது சுயநிர்ணய உரிமைகளை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் நேற்று புதன்கிழமை (09.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம்.
வேட்பாளர்களின் சராசரி வயது
நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். எமது வேட்பாளர்களின் சராசரி வயது 42 ஆகும்.
இளம் வேட்பாளர்கள் என இவர்களைச் சொல்லலாமா என சிலர் கேட்டார்கள். எங்களுடைய அரச அலுவலர்கள் 60 வயது வரை வேலை செய்கின்றனர்.
எனவே 60 வயதுக்கு உட்பட்டவர்களும் இளையோர் தான். 2018ஆம் ஆண்டு தொடங்கிய எமது கட்சியில் யாப்பில் தன்னாட்சி , தற்சார்பு , தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களை முன் வைத்துள்ளோம்.
அதன் அடிப்படையில் தான் எமது கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
எங்களின் கொள்கை
இம்முறை தேர்தலிலும் அதனை முன்னிறுத்தியே போட்டியிடுவோம்.
எங்களின் கொள்கைகளை நாங்கள் எமது கட்சியின் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் செயற்படுகிறோம்.
புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
