கணவனுக்கு தீ வைத்த மனைவி! விசாரணையில் வெளியான காரணம்
பிலியந்தலை மொரட்டுமுல்ல, சமரகோன் பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக மனைவி இன்று (18.06.2023) அதிகாலை 3 மணியளவில் கணவருக்கு தீ வைத்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் நீண்ட நாட்களாக வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த உறவு காரணமாக தம்பதியினருக்கு இடையில் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தீ வைத்து எரித்ததில் அவரது கால்கள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிவித்த மனைவி, தனது கணவர் தான் இறந்துவிட்டதாக நினைத்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
