மனைவி வெளிநாடு சென்ற சில மாதங்களில் கணவன் மரணம்
குருணாகல், பொல்பிதிகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மான் மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தெலம்பிவ பகுதியை சேர்ந்த 38 வயதான ஜயந்த குமார மில்லாவல என் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மரணம்
ஹிரிபிட்டிய நகரத்திலிருந்து பொல்பித்திகமவுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் ஹிரிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் தொழிலுக்கு சென்று 2 மாதங்களேனும் நிறைவடையாத நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.