கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள இளம் பெண்! மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்
இளம் குடும்ப பெண்ணொருவர் கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் இன்று(09.04.2023) பதிவாகியுள்ளது.
குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி, கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு
லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது, யுவதி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி இறந்த பெண்ணுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கொலையை செய்த சந்தேகநபரான கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
