கண்டியில் கணவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள மனைவி
கண்டி மாவட்டம், பொல்காஹவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்டிகும்புர பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மெட்டிகும்புர - கெந்தேஹேன பிரதேச்தைச் சேர்ந்த 42 வயதுடை குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்த நபரின் மனைவியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் பொல்காஹவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்...
யாழில் நடந்த கொடூரம் - கணவனை அடித்துக் கொன்ற மனைவி
மனைவியின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
