இளம் மனைவியை கொலை செய்த கணவனின் விபரீத முடிவு : ஆதரவற்ற நிலையில் பிள்ளைகள்
அளுத்கம பிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அளுத்கம - தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று(04.11.2023) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது மற்றும் அவரது கணவருக்கு 38 வயதாகின்றது.
உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்
மேலும் விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்தது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில், கணவன் அடித்துள்ளார். பலத்த காயம் அடைந்த பெண் கீழே விழுந்ததை அடுத்து, கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

உயிரிழந்த தம்பதிக்கு 12, 10 மற்றும் 6 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது கடைசி மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி ஒன்று வந்துள்ளது. எனினும் அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் அளுத்கம பொலிஸார், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam