தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அவரது மனைவி வழக்குத் தாக்கல்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தைக்கு எதிராக அவரது மனைவி வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான சொகுசு ப்ராடோ வாகனமொன்றை பலவந்தமாக எடுத்துச் சென்று பயன்படுத்துவதாக முன்னதாக பிலியந்தலை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விவாகரத்து வழக்கு
எனினும் குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிசார் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்று சுசந்த தொடாவத்தையின் மனைவியின் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ள நிலையில், தற்போது குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சுசந்த தொடாவத்தைக்கும் தேசிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாக தெரிவித்து, சுசந்த தொடாவத்தையின் மனைவி விவாகரத்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதேநேரம் சுசந்த தொடாவத்தை , வேறொரு பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வெகுவிரைவில் இங்கிலாந்தில் குடியேறும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 27 நிமிடங்கள் முன்

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
