வடகொரிய ஜனாதிபதியின் “மனைவி” பொது நிகழ்வு ஒன்றில் அரிதான பிரசன்னம்!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மனைவியின் தாயும் இன்று அரசாங்க ஊடகங்களில் தோன்றினர்.
கிம்மின் மனைவி ரி சோல் ஜு( Ri Sol Ju) மற்றும் அவரது மாமி கிம் கியோங் ஹுய் (Kim Kyong Hu) ஆகியோர் தலைநகர் பியாங்யாங்கில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வடகொரியாவின் முதல் பெண்மனி, கடைசியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார்
இதேவேளை தென்கொரிய உளவு நிறுவனத்தின் தகவல்படி, வடகொரிய ஜனாதிபதி கிம் மற்றும் ரிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் அவர்களைப் பற்றி அதிகம் தெரியவரவில்லை.
இதற்கிடையில் வட கொரியா, கொரோனா தொற்றுக்களை இதுவரை உறுதிப்படுத்தவில்லை,
எனினும் அதன் எல்லைகளை மூடியுள்ளதுடன், பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
வடகொரியாவில் வறுமை நிலவுகின்ற போதும், அந்த நாடு தொடர்ந்தும் ஏவுகனைகளை சோதனையிட்டு வருவதாக வாரந்தோறும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.



