வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
வட மாகாண சுகாதாரப் பணிப்பாளராக மருத்துவர் திலிப் லியகனே நியமிக்கப்பட்டதை மீள் பரிசீலனை செய்யுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
வெளிமாகாண நியமனம்
அந்த கடிதத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு வட மாகாணத்தில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் வெளிமாகாணங்களில் இருந்து நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தகுதியான சுகாதாரப் பணிப்பாளர் ஒருவரை வடக்கில் இருந்தே தெரிவு செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வழங்கப்பட்ட நியமனத்தை மீள் பரிசீலனை
செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.