எரிபொருள் வரிசையில் நின்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் (Video)
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெட்ரோல் விநியோகம் இன்று மாலை வடமராட்சி, புலோலி பல நோக்கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.
| கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் |
நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இதன் போது 4 கிலோ மீற்றர் வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வரிசையில் காத்திருந்தன.
இவ் வரிசையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரனும் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கான பெட்ரோளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பல நூற்றுக்கணக்கான தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam