ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவுடன் பேசப்போகும் புலம்பெயர் அமைப்பு எது?
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவை சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்புக்கு மத்தியில் க்ளாஸ்கோ சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சில பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ள பின்னணில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியுடன் எந்த அமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது என்ற உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், உலக தமிழர் பேரவை இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தமிழர் பேரவையை சேர்ந்த சுரேன் சுரேந்திரன் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார் என தமிழ் தோழமை இயக்கத்தின் சேனன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,