பிரதான அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டது ஏன்? காரணம் வெளியானது
சமகால அரசாங்கத்தில் பிரதான அமைச்சர்களாக செயற்பட்ட இருவரின் பதவி பறிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமர்சித்தமையினாலேயே அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட “முழு நாடும் சரியான பாதையில்” என விஞ்ஞாபனம் வெளியீட்டு விழாவில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அதற்கமைய, அமைச்சரவைக் கூட்டங்களில் விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் கலந்து கொண்டால், தான் கலந்துகொள்ளப் போவதில்லை என நிதியமைச்சர் நேற்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கவும் ஜனாதிபதி தீர்மானித்ததாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan