விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாதென்றால் இந்த அரசாங்கம் எதற்கு? - சஜித்
சமையல் எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப ஆகாய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவதாயின் இந்த அரசாங்கம் எதற்கு? என எதிர்க்கட்சித்த தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
‘‘அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து குறைந்தபட்சம் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசாங்கத்திடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் தடுக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் நாட்டில் போசாக்குக் குறைபாடும் அதிகரித்து வருகிறது. மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்‘‘ என குறப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
