விவசாய அமைச்சின் செயலாளர் பதவி நீக்கப்பட்டது ஏன்? ஜனாதிபதியே பதில் கூற வேண்டும்
விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி நீக்கம் அடுத்த வருடம் வரப்போகும் பஞ்சம் தொடர்பில் உண்மையைக் கூறியதாலா என்பதை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கரிம உரத் திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தியதன் காரணமாக நெல் மற்றும் ஏனைய பயிர்களின் உற்பத்தி 75 வீதமாக குறைந்துள்ளது என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய 24 மணித்தியாலங்களுக்குள் செயலாளர் நீக்கப்பட்டதாகவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார். விவசாய அமைச்சின் செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியை சேர்ந்தவரோ இல்லை. அவர் அரசாங்கத்தினால் நிமிக்கப்பட்ட ஒருவராகும்.
நாட்டின் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் அரச ஊழியர்களின் தலையை துண்டிக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கை அரச ஊழியர்களை பலவீனப்படுத்தும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் அரச சேவை பலப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நேற்றைய தினம் விவசாயம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
