பதவி விலகுவது ஏன்? மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் சில சம்பவங்கள் காரணமாக தனது ஓய்வு முடிவை முன்கூட்டியே தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது 80வது பிறந்தநாளை கொண்டாடிய பிறகு அடுத்த மாதம் ஓய்வு பெறுவதே தனது நோக்கம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும், ஆறு வாரங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற முடிவு செய்ததாக கூறினார்.
இணைய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த 10 நாட்களாக தன்மனதை பாதிக்கும் வகையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக ஓய்வு பெறும் முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 14ம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் 2019 இல் மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri