ரணில் ஏன் பௌத்த வாக்கு வங்கியை இழந்தார்?

UNP Sajith Ranil Bank Monks Vote Wickramasinghe Premadasa Budhist
By Steephen Mar 14, 2022 05:28 AM GMT
Report

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களில் ஒன்றான ராமஞ்ஞைய மஹா நிக்காய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு “ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” என்ற கௌரவ பட்டத்தை வழங்கியது.

இதற்கு முன்னர் இந்த கௌரவப்பட்டம் இலங்கையின் முதல் பிரதமரான காலஞ்சென்ற டி.எஸ்.சேனாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சஜித் பிரேமதாச , பௌத்த சாசனத்திற்கு செய்து வரும் சேவையை பாராட்டும் வகையில் ராமஞ்ஞைய நிக்காய கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளது.

சஜித் பிரேமதாச சசுனட அருண என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாடு முழுவதிலும் பின்தங்கிய நிலையில் உள்ள பௌத்த விகாரைகளை மேம்படுத்த உதவிகளை வழங்கி வருவது பௌத்த சங்க சபையினரின் பாராட்டை பெற்றுள்ளது.

சஜித் பிரேமதாச பௌத்த சாசனத்திற்கு சேவைகளை செய்து வரும் நிலையில், அவரது தாய் வீடான ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்கு வங்கி குறைந்துள்ளது.

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அதன் பௌத்த வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இணை அமைப்பான பிக்கு முன்னணி கலைக்கப்பட்டமையே இதற்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்குவதில் இருந்து மஹா நாயக்க தேரர்களும் விலகிக்கொண்டனர். இதனால், ரணில் விக்ரமசிங்க பௌத்தத்திற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்று நோக்கப்பட்டார்.

டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ரணசிங்க பிரேமதாச மற்றும் டி.பி.விஜேதுங்க போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மஹா நாயக்க தேரர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்து வந்தனர்.

சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சங்க சபையினருக்கு தூர விலகி பணியாற்றிய தலைவர்கள்.

ரணில் விக்ரமசிங்க, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு சார்பானவர் என்ற தோற்றப்பாட்டை, தெற்கில் உள்ள சிங்கள பௌத்த மற்றும் தேசிய அமைப்புகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தன.

அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சமாதான உடன்படிக்கையை செய்துகொண்டமையானது, புலிகளை வலுவிழக்க செய்ய வேண்டும் என்ற தந்திரமான நடவடிக்கையாக இருந்தாலும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில், ரணில் விக்ரமசிங்க தேசப்பற்று இல்லாத தலைவர் என்ற நிலைப்பாடு ஆழமாக வேரூன்றியது.

சிங்கள பௌத்த மற்றும் தேசியவாத அமைப்புகள் இதனை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்தனர். இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பௌத்த வாக்கு வங்கியை இழக்க செய்தது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US