மதுபானசாலைகளற்ற வலி.வடக்கில் எதற்காக புதிய அனுமதி : வீதிக்கு இறங்கிய மக்கள்
யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதனை எதிர்த்து பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று (08.10.2026) மக்கள் கண்டனப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
தெல்லிப்பளைச் சந்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான போராட்டப் பேரணி, “புதிய மதுபானசாலை அனுமதியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அனுமதிக்கு பொறுப்பான பிரதேச செயலரை இடமாற்றம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தவாறு தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை சென்றடைந்துள்ளது.
மதுபானசாலைகளற்ற பிரதேசம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்பியதுடன், இத்தீர்மானம் சமூகச் சூழலுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.





தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam