மறு வியூகம் ஒன்றை அமைக்குமா அரசாங்கம்?

Mahinda Rajapaksha Gotabhaya Rajapaksha Harsha De Silva Ajith Nivard Capral
By Benat Jan 13, 2022 06:41 PM GMT
Report

இலங்கை இவ்வாண்டு இறுதியில் 6.9 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதில் 2.6 பில்லியன் டொலர் உள்நாட்டு கடனாகும். இந்நிலையில் இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர் பிணை முறி கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சீனா மற்றும் இந்தியாவிடம் கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். எனினும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பிணை முறி கடனை மீள செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முற்படாமலிருப்பது ஏன் என்றும்   ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இம்மாத இறுதியில் செலுத்தப்பட வேண்டியுள்ள மொத்த கடன் தொகை 1.3 பில்லியன்களாகும். இவ்வாண்டு இறுதியில் 6.9 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் எஸ்.என்.பி. சர்வ தேச தரப்படுத்தல் நிறுவனத்தின் தரப்பட்டியலில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய உஉஉ தரத்திலிருந்து உஉஉ - தரத்திற்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் தொகையை இலங்கையால் உரிய காலத்தில் செலுத்த முடியாது அல்லது அவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளோம் என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் செலுத்த முடியுமா என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதுள்ள நம்பிக்கை மீண்டும் மீண்டும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட கடன் மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முற்படாதது ஏன் என்பதே எமது கேள்வியாகும்.

 மக்கள் பாரதூரமான வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் முதலீட்டாளர்களும் கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைப்பதை வரவேற்கின்றனர். ஆனால் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அதற்கான நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன? கடன் மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிடம் கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவிடமிருந்து வணிக கடன்களே அதிகளவில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இது மொத்த கடன் தொகையில் சுமார் 10 சதவீதம் மாத்திரமேயாகும். இதில் வட்டியின்றிய கடன் தொகையும் உள்ளடங்குகிறது. இவ்வாறு மிகக்குறைந்த கடன் தொகையை மீள செலுத்துவதற்கான காலத்தைக்கூட நீடிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முதலீட்டாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் , மத்திய வங்கி ஆளுனர் மாத்திரம் பிணைமுறி கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முடியாது என்று கூறுவதற்கான காரணம் என்ன? செலுத்தப்பட வேண்டியுள்ள 500 மில்லியன் டொலர் பிணை முறி கடனில் 170 மில்லியன் உள்நாட்டு கடன் என்று கூறப்படுகிறது.

அவ்வாறெனில் அந்த உள்நாட்டு கடன் வழங்குனர்கள் யார்? இதில் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர் உள்ளனரா? அதன் காரணமாகவா இந்த கடனை செலுத்தியே தீருவோம் என்பதில் மத்திய வங்கி ஆளுனர் பிடிவாதமாகவுள்ளார்? பிணைமுறி கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைத்தால் சர்வதேச நிறுவனங்களில் தரப்பட்டியலில் முன்னேற்றமடைய முடியும். அவ்வாறில்லை எனில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US