2005ஆம் ஆண்டு தேர்தலில் வென்றவுடன் மகிந்த கொண்டு வந்த வசதி! இளைஞர்களின் செயலால் விரக்தியில் நாமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தான் இலங்கைக்கு இணைய வசதி கொண்டு வரப்பட்டது என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவை மைனா என்கின்றனர்

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் 5% மட்டுமே இணைய வசதி இருந்தது.
மகிந்த ராஜபக்சவால் கொண்டு வரப்பட்ட இணைய வசதியால் இளைஞர்கள் இன்று முகநூலில் அதிக நேரம் இருக்கின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இணைய வசதியை கொண்டுவந்த மகிந்தவை “மைனா” என விமர்சிப்பதுடன் என்னை “பொடி மைனா” என கூறுகின்றனர் என்று கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.