சீனவுக்கு இலங்கை அதிகாரிகள் பதிலளிக்காமை ஏன்..!
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு சீனாவுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்க்ள் வெளியாகியுள்ளன.
அவசரகால தேவைக்காக டீசல் இருப்புக்களை வழங்குவதற்கு சீனா வழங்கிய சலுகைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை என தெரியவந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் விக்ரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர் இந்த சலுகை வழங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சீனாவின் ஆச்சரியம்
சிங்கப்பூரில் உள்ள கையிருப்பில் இருந்து டீசலை வழங்க சீனா தயாராக உள்ளது.
எனினும் இலங்கையின் பதிலளிக்காத அணுகுமுறை சீன அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், சீனா EXIM வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிலுவைக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பாகவும், இலங்கையின் நிதி அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் சீனாவுக்கு வழங்கப்படவில்லை.
சீனாவின் நாணயம் யுவானா? ரென்மின்பியா?
சீனா சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு (CIDCA) ஏற்கனவே 500 மில்லியன் ரென்மின்பி (renminbi) ரென்பின்மி என்பது சர்வதேச ரீதியில் சீனாவின் மத்திய நாணய பாிமாற்றத்துக்கான நாணயம்) அவசர உதவியாக வழங்கியுள்ளது.
இதேவேளை சீனாவிலிருந்து முதலாவது அரசி ஏற்றுமதி இலங்கைக்கு வரவுள்ள நிலையில், தேவையான மருந்துகளின் பட்டியலை வழங்குமாறு இலங்கையிடம் கோரப்பட்டுள்ளது.





டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
