அப்பாவின் பணமே என்னிடம்..! பிரதியமைச்சர் சதுரங்க
எனது தகப்பனார் தந்த பணமே எனது வங்கிக் கணக்கில் உள்ளது என்று கைத்தொழில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சதுரங்க அபேசிங்கவின் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டிருப்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தில் உயர் பதவி
தொடர்ந்தும் குறிப்பிட்:டுள்ள அவர், 2012ஆம் ஆண்டு நான் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தபின் மாதம் 75 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.
அதன் பின் நான் வேலையை விட்டு விலகியபோது மாதம் ஐந்து இலட்சம் ரூபா வரை சம்பளம் வாங்கியிருந்தேன்.
எனது தந்தையார் நிஹால் அபேசிங்க உலக சுகாதார நிறுவனத்தில் உயர் பதவியொன்றில் இருந்தவர்.
அவர் பெரும் தொகை சம்பளம் வாங்கியிருந்தார். அவருக்குக்கிடைத்த பணத்தை எனக்கும் எனது சகோதரனுக்கும் பங்கிட்டுத் தந்துள்ளார்.
அவ்வாறு கிடைத்த பணமே ஒன்றரை இலட்சம் டொலர்கள் என் வங்கிக் கணக்கில் உள்ளது என்றும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
