எரிபொருள் விலையை ஏன் குறைக்க முடியாது சஜித் கேள்வி
நாட்டில் எரிபொருட்களின் விலைகளை ஏன் குறைக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என அண்மையில் கூறியதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனினும் நாட்டின் திறைசேரி நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக அரசாங்கம் கூறுவதாகவும் அவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளும் கட்சியினர் கடந்த காலங்களில் 12 லட்சம் ரூபாவிற்கு கார் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும் என கூறியிருந்தார்கள் என சஜித் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களின் கார் வாங்கும் கனவை அரசாங்கம் எப்பொழுது நிறைவேற்ற போகின்றது என சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.