கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியை முன்னாள் ஆயுதக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர்? கொதித்தெழும் மாணவர்கள்!!
இன்று சமூகவலைத்தளங்களில் அதிக வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற ஒரு விடயம், மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு விடுத்த கடத்தல் மிரட்டல்தான்.
'மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்' என்று என்று அந்த ஆசிரியை மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பில் சில மாணவர்கள், பெறோர்களை அனுகிய எமது செய்தியாளருக்கு அவர்கள் வழங்கிய
கருத்துக்கள் இவை:
(பாதுகாப்பு கருதி கருத்து தெரிவித்தவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன)
கருத்து -1:
“மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’
கருத்து -2:
“பாடசாலைக்குப் போகவே பயமாக இருக்கிறது.. சுகுணன் ரீச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை நாங்கள் பாடசாலைக்கு போகமாட்டோம்..”
கருத்து -3:
“ஒலிப்பதிவு வெளியான அன்றைய தினம் குறிப்பிட்ட ஆசிரியையின் கணவரான வைத்தியர் அந்த ஒலிப்பதிவை பகிர்பவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது முகப்புத்தகத்தின் ஊடாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் மறு தினம் அந்த கண்டனத்தை அகற்றிவிட்டு மனவருத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்கள் யாருமே மிரட்டலுக்குள்ளான மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அவரை காவல்துறை கைதுசெய்யவில்லை?”
கருத்து -4:
“அந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆசிரியையின் கணவர் ஒரு முன்னாள் பிரதி அமைச்சரின் நன்பர். அதனால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தைப் பெருப்பிக்கின்றார்கள்..”
கருத்து -5:
“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”
கருத்து -6:
“ இந்த விடயத்தை மூடி மறைக்க நிறைய காரியங்கள் நடக்கின்றன. பணம், பதவி, அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு என்று நிறைய காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மாணவனுக்கு நியாயம் வேண்டி மக்கள்தான் போராடவேண்டும்…”
கருத்து -7:
“இதை இப்படியோ விட்டால் நாளைக்கு பாடசாலையில் ஆசிரியர்களின் பேச்சு மொழி இப்படியேயாகிவிடும்..’ உன்னை இல்லாமல் செய்துவிடுவேன்.. உன்னை கடத்துவேன்.. நாயே.. மண்டையில போடுவேன்…(பீப்..) “
கருத்து -8:
“ அவர் ஒரு ஆசியராக நடந்துகொள்வதானால் பாடசாலையில் மாணவணைக் கண்டித்திருக்கவேண்டும். ஒரு தயாராக நடந்துகொள்வதானால், அதிபரிடம் முறையிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கவேண்டும். தகப்பன் இல்லாத ஒரு மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி எடுத்து கடத்துவேன்.. காணாமல் போகச் செய்வேன்.. மட்டக்களப்பை விட்டு வெளியேற்றுவேன் என்று மிரட்டுவது ஒரு 'பேட்டை தாதா' செய்கின்ற செயல். அந்த ஆசிரியைக்கு நிச்சயம் தண்டணை வழங்கப்பட்டேயாகவேண்டும்”
கருத்து -9:
“இத்தனைக்கும் மாணவனை மட்டக்களப்பை விட்டு விரட்டுவேன் என்று எச்சரித்த ஆசிரியை மட்டக்களப்பைச் சேர்ந்தவரே அல்ல.. அவர் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. அவருக்கும் அவர் கணவனுக்கு மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் செல்வாக்கு இவ்வாறு பேசும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றது..”
கருத்து -10:
“ ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை: “எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு...’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” - முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும். இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்”
கருத்து -11:
“ஒரு மாணவன் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கின்றான். மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வதற்கான அச்சுறுத்தல் ஆதாரம் வெளிப்பட்டு இருக்கின்றது. பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாகவே மாணவன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றார். பாடசாலை நிர்வாகம் ஏன் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை? உயிரச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை?”





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
