டெல்டா தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
உலகெங்கிலும் புதிய கோவிட் - 19 தொற்றுநோயான டெல்டா மாறுபாடு பரவி வருவதை அடுத்து, இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களும் முகக் கவசங்களை அணிந்து கொண்டு உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கோரிக்கை உலக சுகாதார நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றவர்களுக்கு கூட சமூக பரவலின்போது பாதிக்கப்படலாம் என்று மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் மரியங்கெலா சிமாவோ தெரிவித்தார்.
எனவே மக்கள் தொடர்ந்து முகக்கவங்களைப் பயன்படுத்த வேண்டும், காற்றோட்டமான இடங்கள், சுகாதாரம், உடல் தூரம் இடைவெளி மற்றும் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதிக தடுப்பூசிகள் இருந்த போதிலும், டெல்டா மாறுபாட்டின் பரவலின்போது பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்து மிக முக்கியமானவை என்று சிமாவோ கூறியுள்ளார்.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளை செலுத்திக் கொண்டதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர முடியாது என்றும் சிமாவோ சுட்டிக்காட்டியுள்ளார்.