யாழில் பரபரப்பை ஏற்படுத்திய ஆலய சம்பவம் - வீடு திரும்பிய பாதிக்கப்பட்டோர்..
பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண் பாதிப்புக்குள்ளான 375 பேர் நேற்று(21) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
கண் வலி, கண்களில் எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்டஅறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
கண் பாதிப்பு
சிகிச்சையின் பின்னர் கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போதுவீடு திரும்பியுள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

வீடு திரும்பியுள்ளவர்கள், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு அமைவாக தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகவும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை வழங்கிய கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening