கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 3 பிள்ளைகளின் தாய் மரணம்
ஹிக்கடுவ பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹிக்கடுவ ஆரச்சிகந்த கொவிட் வைத்திய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 3 பிள்ளைகளின் தாய் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
கொவிட் தொற்றினால் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கொவிட் நிமோனியா நிலையில் உயிரிழந்த பெண் தொடன்துவ பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாகும். 14 நாட்கள் கொவிட் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குறித்த பெண்ணுக்கு இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட குறித்த பெண் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.