கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதல் மருத்துவர் தெரிவித்துள்ள விடயம்
தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என விசேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட் - 19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனேக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை முதல் மருத்துவராக ஆனந்த விஜேவிக்ரம செலுத்திக் கொண்டார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி குறித்த அனைத்து தகவல்களையும் ஆராய்ச்சிகளையும் துல்லியமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்தே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த தடுப்பூசி பாதுகாப்பானது. இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
