கொவிட்டை குணப்படுத்தும் பாணி தயாரிக்கும் அமைச்சர்?
கொவிட்-19 நோய்த்தொற்றை குணப்படுத்தக் கூடிய பாணியொன்றை தயாரிப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் கொவிட்டிற்கு எதிரான ஆயுர்வேத பாணி மருந்து ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும், அதனை தாம் பருகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாணி அதிசயமான பாணி கிடையாது எனவும், பல நூறு ஆண்டுகளாக சிங்களவர்கள் பயன்படுத்திய மருந்து வகையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாணியை அருந்துவதற்கு அஞ்சத்தேவையில்லை என அவர் குறிபபிட்டுள்ளார்.
தேன், சாதிக்கா, கொத்தமல்லி மற்றும் இஞ்சி என்பனவே இந்த பாணியில் உள்ளடங்கியுள்ளதாகவும் ,வீட்டில் தாமும் இந்த பாணியை தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக சாதிக்காயை தாமே கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.