யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் கைது!
காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 இலட்சம் ரூபாய் பணம், கைத்தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையினை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் ஊரெழுப்பகுதியில் வைத்து அதிரடியாக மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து இந்த துணிகர சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
பணத்தை பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்களையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
