கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் யார்? அம்பலப்படுத்தும் ஊடகம்
இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்ததாக அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது.
சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான மின்சார கட்டண நிலவை 12,056,803.38 ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை என சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் அவர் குடியிருக்கும் சரண வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கே மின்கட்டணம் செலுத்தவில்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அமைச்சரின் வீட்டிற்கு விஜயம் செய்து அவரது மனைவியுடன் கலந்துரையாடியுள்ளனர். அவரிடம் மின்சார சபையின் அறிவிப்பை ஒப்படைத்திருந்தனர்.
கடந்த ஜனவரி 11, 2022 அன்று அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியது, ஆனால் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. அந்த கடிதத்தில் உடனடியாக நிலுவையினை செலுத்துமாறும், மின் இணைப்பை அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவின் பெயருக்கு மாற்றுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாத அமைச்சர்! தொடர்ந்தும் அச்சுறுத்துவதால் சர்ச்சை
வெள்ளவத்தையில் சண்டித்தனம் காட்டிய முக்கிய அமைச்சர்