வெள்ளை வான் செயற்பாட்டின் தலைவர் யார்? நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அனுரகுமார
இருண்ட கடந்த காலத்தை கொண்ட நபர் ஒருவர் நாட்டிற்கு தலைமை தாங்குகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தலைவரினாலேயே வெள்ளை வான் என்ற கருத்துருவாக்கம் தோற்றம் பெற்றது. லசந்த விக்கிரமதுங்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர்,
போத்தல ஜயந்த கீத்நொயர் போன்ற தலைவர்கள் தாக்கப்பட்டனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் பிரகீத் லலித் குகனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒடுக்குமுறையை முன்னெடுக்க கூடிய அதிகாரம் மிக்க ஒருவர் அதிகாரத்தில் காணப்படுகின்றார். பொதுமக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தப்படுகின்றனர். அரசியல்தலைவர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். ஊடகங்களும் மிரட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
